மனம்நலம் குன்றிய 66வயதான மூதாட்டியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 40 வயதான நபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மூதாட்டியின் வீட்டிற்கு முன்பாக கடந்த 09ஆம் திகதியன்று இரவு வேளையில் சென்ற நபர் , போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளார். அதன் பின்னர் வாகன ஹார்னை அடித்துள்ளார். சத்தம் கேட்டு கதவைத்திறந்து எட்டிப்பார்த்த மூதாட்டியை பிடித்து இழுத்து வன்புணர்ந்துள்ளார்.

சத்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டியின், சகோதரியான 70 வயதான மூதாட்டியையும் அடித்து காயமேற்படுத்தி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாதிப்படைந்த இரு மூதாட்டிகளும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர், சம்பவம் நடந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாகி உள்ளார் எனவும் , அவரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை , குறித்த நபர் கொலை மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply