வவுனியா – நெடுங்கேணி சிவாநகர் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நெடுங்கேணி – சிவாநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நேற்றிரவு(18) குறித்த யுவதி வீட்டின் பின்புற வாசலுக்கு சென்ற போது, மறைந்திருந்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நெடுங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.