சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிகம் அடிபட்டு இருப்பது டாக்டர் சிவக்குமார் என்பவரின் பெயர்தான்.. யார் இவர்? எதற்காக இவரை பற்றி ஆறுமுகசாமி ஆணையம் புகார்களை வைக்கிறது? மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உண்மை அதிமுக தொண்டர்கள் பலர் இந்த அறிக்கையை பார்த்து அதிர்ந்து போய் உள்ளனர். இதில் சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சிவக்குமார்
ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிகம் அடிபட்டு இருப்பது என்னவோ சிவக்குமார் பெயர்தான். ஜெயலலிதாவின் தனி மருத்துவரான இவர் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று அதில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அதாவது ஜெயலலிதாவிற்கு 3 நாட்கள் காய்ச்சல் இருந்தன. அப்போது அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை. வெறும் பாராசிட்டமால் மட்டுமே கொடுத்துள்ளனர். இதனால் அவரின் உடல்நிலை மோசமாகி உள்ளது.
மயக்கம்
அதன்பின் அவர் மயக்கம் அடையும் நிலைக்கு கூட சென்றார். அவர் சுயநினைவை இழக்கும் வரையிலும் கூட அவருக்கு வெறும் பாராசிட்டமால் மட்டுமே மருந்தாக பரிந்துரை செய்துள்ளார் சிவக்குமார்.
அதேபோல் ஆஞ்சியோ மருத்துவம் செய்வதில் சிவக்குமாரின் கருத்து தலையீடு உள்ளது. ஆஞ்சியோ செய்ய விடாமல் தடுத்த நபர்களில் சிவகுமாரும் ஒருவர் என்று கூறப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களின் சிவக்குமார் முக்கியமான நபர் இதில் கூறப்பட்டு உள்ளது.
காரணம்
யார் இந்த சிவக்குமார்.. கேள்விப்படாத நபராக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? ஜெயலலிதாவிற்கு தனி மருத்துவராக இருந்தவர்தான் சிவக்குமார்.
இவரும் சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர். சசிகலாவிற்கு ரத்த சொந்தம் கிடையாது. ஆனால் வேறு வகையிலான உறவு. அதிமுகவில் திருச்சிக்கு பொறுப்பாளராக இருந்தவர்தான் கலியபெருமாள். இவர் இளவரசிக்கு சம்பந்தி. இவருக்கு ஏற்கனவே சிவகுமாரை தெரியும்.
பரிந்துரை
இவர் கொடுத்த பரிந்துரையில் சசிகலாவின் அண்ணன் சுந்திரவாதனத்தின் மகளை திருமணம் செய்தார் சிவக்குமார். கிட்டத்தட்ட சசிகலாவிற்கு சிவக்குமார் மகன் முறை வேண்டும் என்று கூட சொல்லலாம்.
அதேபோல் இதே சுந்திரவாதத்தின் இன்னொரு மகளைதான் டிடிவி தினகரன் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் சிவக்குமார் – டிடிவி தினகரன் இருவரும் சகலை ஆகிறார்கள்.
சசிகலா
இப்படித்தான் சிவக்குமார் சசிகலா குடும்பத்திற்குள் வந்தார். இவர் திருச்சியை சேர்ந்தவர். தஞ்சாவூரில் டாக்டராக இருந்தார். இப்படித்தான் அவர் ஜெயலலிதாவிற்கு நெருக்கம் ஆனார். இதன் மூலம் ஜெயலலிதாவின் தனிப்பட்ட மருத்துவராகவும் அவர் உருவெடுத்தார். சிவக்குமார் மிகவும் அமைதியான நபர். பெரிதாக சர்ச்சைகளில் சிக்காதவர்.
அரசியல்
ஈடுபாடு பெரிதாக அரசியல் ஈடுபாடு இல்லாதவர். அரசியல் ரீதியாக தன்னை இவர் காட்டிக்கொண்டதே இல்லை.
ஜெயலலிதாவின் நம்பிக்கையான நபர்களில் ஒருவராக இருந்தார் சிவக்குமார். இப்படிப்பட்ட சிவக்குமார்தான் தற்போது விசாரணையில் சிக்கி இருக்கிறார். இவரையும் குற்றவாளியாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.