எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம், இன்று (24) அறிவித்தது.

எரிவாயு விலைச் சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 5ஆம் திகதிகளில் எரிவாயு சிலிண்டர்களில் விலைகள் திருத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களின் 5ஆம் திகதிகளில் எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைக்கப்பட்ட நிலையில், நவம்பரிலும் விலைக் குறைப்பே அமுலாகவுள்ளது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோ கிலோகிராம் சிலிண்டரின் விலை 4,280 ரூபாயாகவும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,720 ரூபாயாகவும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 800 ரூபாயாகவும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எரிவாயு விநியோகத்தை பராமரிக்கப்பதற்காக உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் டொலர் (2600 கோடி ரூபாய்) கடனில் 750 கோடி ரூபாய் திறைசேரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், இன்று (24) தெரிவித்தார்.

அதற்கமைய, லிட்ரோ நிறுவனம், 1400 கோடி ரூபாயை திறைசேரிக்கு செலுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், டிசெம்பர் மாதத்துக்குள் முழுத் தொகையும் செலுத்தி முடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply