மீன் வெட்டுவதில் தம்பதியினரிடம் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததில், தம்பதியினர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மனைவி சமையலுக்காக மீன் வெட்டிக்கொண்டிருந்த வேளை , கணவன் மனைவி மீன் வெட்டும் முறை சரியில்லை என குறை கூறியுள்ளார்.

அதனால் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் கணவன் மனைவியின் கையில் இருந்த கத்தியை பறித்து குத்தியுள்ளார்.

கணவனின் கையில் இருந்த கத்தியை மனைவி மீண்டும் பறித்து கணவனை குத்தியுள்ளார். அதனால் இருவரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply