கொழும்பு கோட்டை மொத்த வியாபாரிகளால், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன, இன்று (29) தெரிவித்தார்.

திறந்த கணக்குகள் மூலம் கோதுமை மா இறக்குமதியை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கிடைத்தவுடன் கோதுமை மா இறக்குமதியை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அதிகளவான தொகை கோதுமை மா, இறக்குமதிக்காக முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாவும் செனவிரத்ன சுட்டிக்காட்டினார்.

Share.
Leave A Reply