முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி கடற்கரையில் கரைவலை தொழில் செய்துவரும் 23 அகவையுடைய தொழிலாளி ஒருவர், கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) காலை, கயிறு இழுத்த வேளை கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். அவரை தேடும் நடவடிக்கையில் கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

காணாமற்போன மீனவரின் சடலம், கொக்குளாய் கடற்கரையில் இன்று (30) காலை கரைஒதுங்கியுள்ளது.

உடலத்தினை மீட்ட மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர் என அறியமுடிகின்றது.

மீன் வியாபாரி மயங்கி விழுந்து மரணம்


வீதியில் சென்று கொண்டிருந்த மீன் வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் மீன்களை கொள்வனவு செய்வதற்காக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குரவில் உடையார் கட்டுப்பகுதியினை சேர்ந்த ஆதிமுருகன் யோகரா என்ற வியாபாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Share.
Leave A Reply