நடிகை ஹன்சிகா மோத்வானி வரும் டிசம்பர் 4ம் தேதி தனது பிசினஸ் பார்ட்னரான சோஹைல் கதுரியாவைத் திருமணம் செய்கிறார். இவர் யார் தெரியுமா?
நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரும் நடிகர் சிம்புவும் முன்னர் காதலித்து வந்தனர்.
ஆனால் அவர்களின் காதல் நிறைவேறவில்லை. 2014-ம் ஆண்டு அவர்களின் காதல் முறிந்தது. இதைத் தொடர்ந்து ஹன்சிகா தமிழ்ப் படங்களில் நடிப்பதும் சற்றே குறைந்தது.
இதனிடையே ஹன்சிகா திருமணம் செய்துகொள்ளப்போவதாகச் செய்தி வெளியானது. இது குறித்து அவர் அதிகாரபூர்வமாக எதுவும் சொல்லாமல் இருந்தார்.
அப்போது இத்திருமணத்தை ராஜஸ்தான் கோட்டையில் நடத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இதற்கு முன்னர், ஹன்சிகாவின் அண்ணன் திருமணமும் இக்கோட்டையில்தான் நடந்தது. ‘ஹன்சிகாவிற்கு மாப்பிள்ளை யார்’ என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. தற்போது மாப்பிள்ளை தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஹன்சிகா
தன்னுடன் இணைந்து ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வரும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா என்பவரை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
இது தொடர்பாக ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோஹைல் கதுரியா ஈபிள் டவர் அருகில் நின்று கொண்டு தன் காதலைத் தெரிவிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளார்.
கீழே ‘என்னைத் திருமணம் செய்து கொள்வாயா’ என்ற வாசகமும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஹன்சிகா வெள்ளை நிற ஆடையில் ஜொலிக்க, சோஹைல் வெள்ளை சட்டையும் கறுப்பு கோட்டும் அணிந்திருந்தார்.
ஹன்சிகா இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தவுடன் சோஹைல் ‘ஐ லவ் மை லைப்’ என்று கமென்ட் பகிர்ந்துள்ளார்.
இருவரும் டிசம்பர் 2 – 4 ராஜஸ்தானில் திருமணம் செய்து கொள்கின்றனர். அதாவது 2ம் தேதி சடங்குகள் தொடங்கி 4ம் தேதி திருமணம் நடக்கிறது.
இத்திருமணம் குறித்த செய்தி வெளியானவுடன் பாலிவுட் நண்பர்கள் போன் மூலமும், சமூக வலைதளம் மூலமும் ஹன்சிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருமணத்திற்கு சிம்புவிற்கு அழைப்பு வருமா என்று தெரியவில்லை. சோஹைல் சொந்தமாக டெக்ஸ்டைல் கம்பெனி நடத்திவருகிறார்.
அதன் மூலம் சர்வதேச நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி செய்து வருகிறார். ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் திருமணத்திலும் சோஹைல் கலந்து கொண்டார்.