வௌிநாடுகளில் இருந்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 13 பொதிகளில் காணப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குஷ், ஐஸ், கஞ்சா விதையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய், 5272 போதை வில்லைகள், போதைப்பொருள் அடங்கிய 425 முத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் 73 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு, போதைப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Share.
Leave A Reply