ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை 4 ஓட்டங்களால் வெற்றி ஈட்டியமையால் இலங்கை நொக்கவுட் ஆனது அவுஸ்திரேலியா (168/8) ஆப்கானிஸ்தான் (164/7)

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று இடம்பெற்ற போட்டியில் அனல் பறக்கும் ஆட்டத்திற்கு பிறகு அவுஸ்திரேலிய அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று 4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அதன்படி இவ்வருடத்திற்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.

இப்போட்டியில் வேகமான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் 23 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

அவரது இன்னிங்ஸில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

 

Share.
Leave A Reply