>தனது கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கற்று நிறைவு செய்த ராமகிருஷ்ணன் சயாகரி மேல் படிப்பை தொடர்வதற்காக மூன்று தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டு தனியார் கல்வியகம் ஒன்றில் பணம் செலுத்தியிருந்தார்.

அதற்கு முன்னதாக யாழ். பல்கலைக்கழகத்தில் இணைவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருந்த சூழ்நிலையில் அந்த வாய்ப்பு கைகூடியது.

வாய்ப்பை தவறவிடாது சித்த மருத்துவ பீடத்தில் இணைந்து கொண்டு தனது மேல் படிப்பை தொடர ஆரம்பித்தார்.

இவரின் பெற்றோர் இருவரும் செவிப்புலன் அற்றவர்கள் என்ற போதும், கோவில்களுக்கு பூமாலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு சயாகரியுடன், மேலும் இரண்டு குழந்தைகளை செவ்வனே வளர்த்து வந்தனர்.

சயாகரிக்கு இளைய சகோதரர் மற்றும் ஒரு சகோதரி உள்ளார். இளைய சகோதரர் உயர்தர கல்வியை நிறைவு செய்து தொழினுட்பத்துறையில் பல்கலைக்கழக நுழைவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இளைய சகோதரி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கடந்த வருடம் தோற்றியிருந்தார்.

சயாகரி சமூகத்தின் மீது மிகுந்த பற்றும் ஆலய விவகாரங்களில் ஆர்வத்துடன் பங்குபற்றுபவராகவும் இருந்துள்ளார் என்று அவரது அயலவர்கள் கூறுகின்றனர்.

பெற்றோருடன் சைகை மொழியில் பேசுவதில் தனது சகோதர சகோதரியை விட இவர் சிறந்த விளங்கியுள்ளார்.

பல்கலைக்கழகத்திலும் அவர் சிறப்பான ஆக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தனது ஊர் மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதையை பெற்றிருந்ததுடன், தனது பிரதேச மக்கள் குறித்து மிகுந்த கரிசனையுடன் செயற்படுபராக இருந்துள்ளார்.

இவ்வுலகை நீக்கும் போது ராமகிருஷ்ணன் சயாகரிக்கு 23 அகவையே பூர்த்தியாகியிருந்தது. இந்த வயதிலும் அவர் பிரதேச மக்கள் மற்றும் சக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மிகுந்த அன்பையும், ஆதரவையும் பெற்றிருந்தார்.

>

Share.
Leave A Reply