நண்பனைக் கொன்று அவரின் பிறப்புறுப்பை அறுத்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.
மும்பை அருகிலுள்ள பிவாண்டியைச் சேர்ந்தவர் அஸ்லாம் அன்சாரி. இவர் நண்பர் சமீம் அன்சாரி (21). சமீன் அன்சாரி சமீபத்தில் ஹோட்டல் ஒன்றை திறந்தார்.
இந்த ஹோட்டலில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு. இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். இந்த நிலையில், இருவரும் ஹோட்டலில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது காதலிகள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. சமீமுக்கு 5 காதலிகள் இருக்கின்றனர்.
பார்ட்டியில், எந்தக் காதலியிடமும் சீரியஸாக இல்லை என்று சமீம்-மீது அஸ்லாம் அன்சாரி குற்றம்சாட்டினார்.
ஐந்து காதலிகளில் ஒருவரிடமிருந்து விலகி இருக்கும்படி அன்சாரி கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை சமீம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அஸ்லாம் அன்சாரி தன் நண்பன் சமீம் அன்சாரியை கத்தியால் குத்திக் கொலைசெய்துவிட்டு அவரின் பிறப்புறுப்பை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
காலையில் சமீம் ஊழியர் வந்தபோதுதான் கொலை பற்றி தெரியவந்தது.
காதல் விவகாரத்தில் தகராறு; நண்பனைக் கொன்று பிறப்புறுப்பை அறுத்த இளைஞர்! – அதிர்ச்சி சம்பவம்
இது குறித்து அவர் உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து சமீம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர விசாரணைக்குப் பிறகு கொலையாளி அஸ்லாம் அன்சாரியை கைதுசெய்தனர். அஸ்லாம் அன்சாரி போலீஸில், “சமீம் அன்சாரிக்கு 5 காதலிகள் இருந்தனர். அவர்களில் யாரிடமும் சமீம் விஸ்வாசமாக இல்லை. அவர்களில் ஒருவரைத்தான் காதலிப்பதாக கூறினான்.
அதனால், அந்தப் பெண்ணிடம் விஸ்வாசமாக இரு, அல்லது அவரிடமிருந்து விலகிவிடு என்று கேட்டுக்கொண்டேன்.
ஆனால் சமீம் விலகவில்லை. இதனால் ஹோட்டலில் பார்ட்டி நடந்தபோது ஏற்பட்ட வாக்குமூலத்தில் சமீமை கொலைசெய்தேன்” என்று தெரிவித்தார். போலீஸார் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.