மும்பையில் முன்னாள் காதலனுடன் சேர தடையாக இருக்கும் கணவர் தன் பேச்சை கேட்பதற்காக சூனியம் செய்ய ஜோதிடருக்கு மனைவி ரூ.59 லட்சம் வரை செலவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்த தொழிலபதிபர் ஒருவர் (வயது 39) இவருக்கு 38 வயதில் ஒரு மனைவி உள்ளார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், தொழிலதிபரின் மனைவி 13 வருடங்களுக்கு முன்பு பரேஷ் கோடா என்பவரை காதலித்துள்ளார்.

இவர்களின் காதன் திருமணத்திற்கு பிறகும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இருவரும் அவ்வபோது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இது குறித்து தொழிலதிபருக்கு தெரிய வரவே அவர் அதிர்ச்சி அடைந்து இருவரையும் கண்டித்தார்.

அவர் கூறியதையும் பொருட்படுத்தாமல் தனது கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்திருந்தார் தொழிலதிபரின் மனைவி. கடந்த மாதம் தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக தனது வீட்டில் உள்ள அலமாரியில் சுமார் ரூ. 35 லட்சம் பணம் வைத்திருந்தார் தொழிலதிபர்.

இதுகுறித்து அவர் தனது மனைவிக்கும் தெரிவித்திருந்தார். அக்டோபர் 18-ம் தேதி அலமாரியில் வைத்திருந்த பணம் காணாமல் போனதைக் கண்டு தொழிலபதிபர் திடுக்கிட்டார்.

இது குறித்து மனைவியிடம் கேட்டபோது முன்னுக்கு பின்னாக முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டுபிடித்த தொழிலதிபர் மனையிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.

தொழிலபதிபர் பணம் மற்றும் நகைகளை திரும்பி தருமாறு மனைவியின் கள்ளக்காதலன் மற்றும் மனைவியிடம் பேச்சுவார்த்தை மூலம் மீட்க முயன்றார்,

ஆனால் அவருக்கு அது தோல்வியாக முடிந்தது, இறுதியாக, அவர் போலீஸ் நிலையத்தில் சென்று மனைவி மற்றும் முன்னாள் காதலன் பரேஷ் கோடா மீது புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் தொழிலதிபர் மனைவியை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில் மனைவிக்கும் தொழிலதிபருக்கும் அடிக்கடி சண்டை வருவதால் விரக்தி அடைந்த அவர்,முன்னாள் காதலனுடன் சேர தடையாக இருக்கும் கணவர் தன் பேச்சை கேட்பதற்காக சூனியம் வைக்க இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஜோதிடர் படால் சர்மா வை நாடி உள்ளார்.

ஜோதிடர் படால் சர்மா பிரச்சினையை தீர்ப்பதாக உறுதியளித்தார். இதுகுறித்து அந்த பெண் தனது முன்னாள் காதலன் பரேஷ் கோடா தெரிவித்தார்.

பரேஷ் கோடாவும் தொழிலதிபர் மனைவிக்கும் ஜோதிடருக்கும் இடையில் இடைத்தரகாக செயல்பட்டுள்ளார்.

ஜோதிடர் படால் சர்மா சூனியம் செய்வதற்கான கட்டணமாக தொழிலதிபர் மனைவியிடருந்து பணம் மற்றும் தங்க நகைகளை பறித்துள்ளார்.

இதுவரை ரூ.59 லட்சம் வரை தோதிடர் பறித்தாக கூறப்படுகிறது. ஜோதிடர் படால் சர்மா முன்னாள் காதலன் பரேஷ் கோடா ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply