மது அருந்திவிட்டு போதையில் யானைகள் உறங்கிய விநோத சம்பவம் ஒடிசாவில் இடம்பெற்றுள்ளது.

ஒடிசா, கியோன்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் இலுப்பை மரப் பூக்களை நீரில் ஊறவைத்து மக்குவா’ எனப்படும் சாராயத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இதன்போது அங்கு வந்த சுமார் 24யானைகள் அங்கிருந்த சாராயத்தைப் பருகியுள்ளதோடு, அங்கிருந்த பானைகள் அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளன. பின்னர் அப்பகுதியிலேயே உறங்க ஆரம்பித்துள்ளன.

இதனையடுத்து குறித்த யானைகளை எழுப்ப அப்பகுதி மக்கள் முயற்சி செய்த போதும் அது, பயனளிக்காததால் வனத்துறையினருக்கு இது குறித்துத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் , பெரிய மேளங்களைக் கொண்டு ஒலி எழுப்பியுள்ளனர்.

அவ் ஒலியைக் கேட்டு உறக்கம் கலைந்த ‘கும்பகர்ண’ யானைகள் மீண்டும் காட்டுக்குள் சென்றுள்ளன.

Share.
Leave A Reply