இலங்கையில் 77 ஆண்டுகள் சோழராட்சி நிலவியது. அதில் இராஜேந்திரசோழன் பொலன்னறுவையில் ஏழு சிவனாலயங்களை நிறுவினான். இன்றும் அதன் எச்சங்கள் பொலன்னறுவையில் காணப்படுகின்றன.

அன்று இலங்கை முழுவதும் நிருவாக மொழியாக தமிழ் மொழியே இருந்தது.

நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

வரலாற்றை நோக்குகின்ற போது பத்தாம் நூற்றாண்டில் இறுதிக் காலத்தில் இந்தியாவில் இருந்து படையெடுத்த இராஜராஜ சோழன் இலங்கை தலைநகராக இருந்திருந்த அனுராதபுரத்தை கைப்பற்றி ஆட்சி செலுத்தினான்.

பின்னர் போரில் அனுராதபுரம் வீழ்ச்சியுற தெற்கே உள்ள பொலன்னறுவையை கைப்பற்றி தலைநகரமாக்கினான்.

1007 காலப் பகுதியில் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழன் இலங்கையை கைப்பற்றி முழு இலங்கையையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.

அக் காலத்தில் ராஜேந்திர சோழன் அங்கு ஏழு சிவன் ஆலயங்களை உருவாக்கினான்.

அது மாத்திரம் அல்ல இலங்கையின் பல பாவங்களிலும் ஆலயங்களை அமைத்ததில் ராஜேந்திர சோழனுக்கு பெரும் பங்கு இருக்கின்றது.

1070 ஆண்டு வரை ராஜேந்திர சோழன் அதனை சிறப்பாக பராமரித்து வந்தான்.

இலங்கையில் 77 ஆண்டுகள் சோழர் ஆட்சி காலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதன் போது இலங்கையில் நிர்வாக மொழியாக தமிழ் மொழி இருந்ததும் இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது.

இன்றும் அந்த ஆலயங்களின் எச்சங்கள் பொலன்னறுவை நகரில் காணப்படுகிறது.

கடந்த வாரம் சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையிலான குழுவினர் அங்கு சென்ற பொழுது அதனை காண முடிந்தது.

அதன் சில பாகங்களை இங்கு நீங்கள் காணலாம்.

சோழர்கள் ஆட்சிகாலத்தில் “ஜனநாதமங்கலம் ” என பொலன்னறுவை அழைக்கப்பட்டது. அந்தளவிற்கு இலங்கையில் சைவசமயம் மேலோங்கி இருந்தது.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

 

 

Share.
Leave A Reply