♥ சிறையில் அமைச்சர் உல்லாச வாழ்க்கை அனுபவிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
♠ பாஜகவால் மட்டுமே காயம்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு நகைக்க முடியும்.
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார்.
அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதற்கிடையே, சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்துவிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சிறையில் அமைச்சர் உல்லாச வாழ்க்கை அனுபவிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். வீடியோ தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், ” உண்மையிலேயே சத்யேந்திர ஜெயின் முதுகெலும்பு பாதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாஜகவால் மட்டுமே காயம்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு கொடூரமான நகைச்சுவைகளை செய்ய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | CCTV video emerges of jailed Delhi minister and AAP leader Satyendar Jain getting a massage inside Tihar jail. pic.twitter.com/MnmigOppnd
— ANI (@ANI) November 19, 2022