யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரி ஒன்றின் ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த ஆசிரியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.
அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று , தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்தபோது, அந்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர் அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.