உலக கோப்பை கால்பந்து – செர்பியாவை 2- 0 என வீழ்த்தியது பிரேசில் Byமாலை மலர்24 நவம்பர் 2022 9:59 PM முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

ஆட்ட நேர இறுதியில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தோகா: 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற குரூப் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில், செர்பியா அணிகள் மோதின.

முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் 62 மற்றும் 73 வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து அசத்தினார். இறுதியில், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.

Share.
Leave A Reply