2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதம் என 2 தடவைகளில் மின் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உப குழுவுக்கு மின்சார சபையின் பிரதிநிதிகள், உத்தேச அதிகரிப்பு குறித்து விளக்கமளித்தனர்.
எவ்வாறாயினும், மின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து தற்போதைக்கு பரிசீலிக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.