ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன் அல் ஹஷிமி அல் குரேஷி சண்டை ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார் என அந்த இயக்கம் அறிவித்துள்ளது.
இறைவனின் எதிரிகளுடனான சமரில் அபு ஹசன் அல் ஹஷிமி அல் குரேஷி (abu al-hasan al-hashimi al-qurashi) உயிரிழந்தார் என ஐ.எஸ். இயக்கத்தின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான விபரங்களை அவர் வெளியிடவில்லை.
இதேவேளை, சிரியாவின் தென் பகுதியிலுள்ள தாரா மாகாணத்தில், ஒக்டோபர் மத்தியில் நடந்த சுதந்திர சிரிய இராணுவம் எனும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் அபு ஹசன் அல் ஹஷிமி அல் குரேஷி கொல்லப்பட்டார் என அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக தாக்குதலை ஆரம்பிழத்ததாக கடந்த ஒக்டோபர் மத்தியில் சிரிய அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ். இயக்கத்தின் முன்னாள் தலைவர் அபு இப்ராஹிம் அல் குரேஷி சிரியாவில் வட பகுதியிலுள்ள இட்லிப் மாகாணத்தில் கடந்த பெப்ரவரியில் அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்தார்.
அவருக்கு முன்னர் தலைவராக இருந்த அபு பக்ர் அல் பாக்தாதி 2019 ஒக்டோபரில் இட்லிப் மாகாணத்தில் கொல்லப்பட்டிருந்தார்.