15 வயதான மாணவி ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் ஹொரணை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் குளியாபிட்டிய நீதிவான் ரந்திக லக்மால் ஜயலத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தங்கொட்டுவ, வென்னப்புவ மற்றும் மாகந்துர போன்ற பல பிரதேசங்களில் விஞ்ஞானம் பாடம் கற்பிக்கும் 24 வயதுடைய ஆசிரியர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பன்னல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரிடம் கருத்தடை மாத்திரைகள் காணப்பட்டதாகவும் இது தொடர்பான விசாரணையின்போதே சந்தேக நபரான ஆசிரியரும் கருத்தடை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதாக பன்னல பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சாவித்திரி சிறிமான்ன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, இம்மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதிவான் நளினா இம்புலாகொட உத்தரவிட்டார்.