6 வயது சிறுமியை 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வழக்கில் குற்றவாளிக்கு 62 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இந்திய கேரள மாநில நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (டிச. 03) தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பட்டாம்பி என்ற பகுதியில் உள்ள மதரஸா என்று சொல்லப்படும் இஸ்லாமிய மத போதனைகளை கற்றுத் தரும் பாடசாலை ஒன்று இயங்கி வருகிறது.

பல்வேறு சிறுமிகள் பயிலும் குறித்த பாடசாலையில் 30 வயதான அப்துல் ஹக்கீம் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இங்கு பயின்ற 6 வயது சிறுமியை யாருமில்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பிறகு சிறுமி வீட்டிற்கு அழுதுகொண்டே சென்ற போது, அவரிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது தனக்கு நேர்ந்ததை சிறுமி கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனே இந்த சம்பவம் குறித்து பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் ஹக்கீமை கைது செய்து விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இந்த வழக்கு விசாரணையில் பொலிஸார் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்த்து நடைபெற்று வந்த வழக்கில்தில், தற்போது குற்றவாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு கேரள நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

அதன்படி 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி அப்துல் ஹக்கீமிற்கு 62 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனையும் 3 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த 3 இலட்சம் ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டும் என்றும் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply