ஒரு பெண்ணுக்காகவோ அல்லது ஒரு ஆணுக்காகவோ இரண்டு பெண்களோ அல்லது ஆண்களோ சண்டை போட்டுக்கொள்ளும் சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், பீகாரில் ஒரு ஆணுக்காக 5 பெண்கள் ஒரே நேரத்தில் சண்டை போட்டு, மாறி மாறி தாக்கிக்கொள்ளும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம், சோன்பூரில் ‘நான் அவன் இல்லை’ படத்தில் வரும் ஜீவனை போல ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் 5 பெண்களைக் காதலித்து வந்துள்ளார்.
ஆனால், ஒருவரைக் காதலிப்பது மற்றவருக்கு தெரியாமல் ஏமாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில், அந்த இளைஞர் தன்னுடைய 5 காதலிகளில் ஒருவரை மட்டும் அழைத்துக் கொண்டு, அவரது ஊரில் நடைபெற்ற பொருட்காட்சிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அந்த இளைஞரின் மற்றொரு காதலி, ‘என்னடா நம்ம ஆளு வேறு ஒரு பொண்ணோட போறானே’ என்று அதிர்ச்சியடைந்து அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அந்த வழியாகச் சென்ற இளைஞரின் இன்னொரு காதலி பார்க்க, ‘யாரு இவ நம்ம லவ்வர் கூட சண்டை போட்டுட்டு இருக்கா’ என்று அவரும் களத்தில் இறங்கி சண்டை போடத் தொடங்கியுள்ளார்.
இப்படியாக இளைஞரின் 5 காதலிகளும் ஒரே இடத்தில் எதிர்பாராமல் வந்து விட, அவன் எனக்குத்தான் என்று ஒருவரை ஒருவர் மாறி மாறி தலைமுடியைப் பிடித்துத் தாக்கிக்கொண்டனர்.
இந்தச் சண்டையில் இளைஞர் தனது காதலிகளை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் கூட, எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்று சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர்.
இந்தச் சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது.
छपरा, बिहार -एक बॉयफ्रेंड के लिए भिड़ गईं 5 लड़कियां
एक गर्लफ्रेंड के साथ सोनपुर मेला घुमाने लाया था, फिर क्या था जमकर बवाल हो गया।#Bihar #sonpurmela #ViralVideos #viral #Fights #love #girls #Girlfights #GIRLFRIEND #boyfriends pic.twitter.com/GHvUJsZ4IR— Ankit Kumar @Journalist (@AnkitAnitaSingh) November 29, 2022