பஸ்ஸின் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தான் செலுத்திச் சென்ற பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அந்த பஸ் மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வீட்டில் மோதியுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவ பிலியந்தலை 342 பஸ் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இந்த பஸ், கொட்டாவ பஸ் நிலையத்துக்கு முதல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக இன்று (20) அதிகாலை 5.45 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது சாரதியினால் பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாமல், வீதியை விட்டு விலகிய பஸ் அருகிலிருந்த மதிலை உடைத்துக் கொண்டு வீட்டின் வீட்டின் முன்பக்கத்தை மோதி நின்றுள்ளது

இந்த நிலையில் குறித்த பஸ்ஸின் சாரதி, சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்து காணப்பட்டுள்ளார். கபில பெரேரா (54) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply