கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவரது கணவரால் அரங்கேறிய சம்பவம் தொடர்பான செய்தி, தற்போது இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது.

அவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக தான் தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டும், ஆண் குழந்தை இல்லை என்பதை குறிப்பிட்டு தொந்தரவு செய்தும் சரண் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

அது மட்டுமில்லாமல், சரணுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால் தனது மனைவியை விவாகரத்து செய்து விடவும் சரண் முடிவு செய்த்தாக தகவல்கள் தெரியவிக்கின்றது.

இதனால், விவாகரத்து வேண்டும் என கேட்டு மனைவியை சரண் தொந்தரவு செய்துள்ளார். அப்படி ஒரு சூழலில் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவர், சிறந்த ஆரோக்கியத்திற்கு ஊசி போடுவதாக கூறி மருத்துவர் மூலம் ஊசி ஒன்றை கர்ப்பிணி மனைவி உடல் மீது செலுத்தி உள்ளார் சரண்.

அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் மருத்துவமனைக்கு ஹெல்த் செக்கப்பிற்காக மருத்துவமனை சென்ற போது தான் அவரது உடலில் HIV பாசிட்டிவ் இருப்பது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இது பற்றி தனது கணவரிடம் கேட்ட போது கர்ப்பமாக இருப்பதன் காரணமாக HIV ஏற்பட்டிருக்கலாம் என்றும் சரண் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கணவர் மீது சந்தேகம் எழவே, அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சரணை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது தான், மருத்துவர் ஒருவரிடம் தனது மனைவியை அழைத்து சென்று அவரது உடலில் HIV ரத்தத்தை செலுத்தியதும் உறுதியாகி உள்ளது.

அது மட்டுமில்லாமல், மனைவிக்கு HIV இருந்தால் அதன் பெயரில் அவரை விவாகரத்து செய்வதற்காக, அவரது உடலில் எச்ஐவி ரத்தத்தை செலுத்திய கணவன் தொடர்பான செய்தி தற்போது பலரையும் குலை நடுங்க வைத்துள்ளது.

 

Share.
Leave A Reply