எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர், நாட்டில் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அதனால் நாடு செயலிழக்கக் கூடும் என்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன, திங்கட்கிழமை (20) தெரிவித்தார்.

31ஆம் திகதியுடன் நாட்டின் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும் என்றும் அதன்பின்னர், நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகள் மூடப்படும் என்பதாலேயே மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply