யாழ். அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.
மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை – பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞன் காலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இளைஞனின் தந்தை இளைஞனை தேடிச் சென்றிருந்தபோது நீாில் மூழ்கி அவா் உயிாிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வலிப்பு காரணமாக நீாில் மூழ்கி உயிாிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது.
சம்பவம் தொடா்பாக அச்சுவேலி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.