இறக்குவானையில் இருந்து 15 வயதுடைய சிறுமியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டிற்குள் வைத்து பலவந்தமான முறையில் மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 24 வயதுடையவர் என்றும், அவர் ஒரு பிள்ளையின் தந்தை என்றும் கூறப்படுகின்றது.
சந்தேக நபர் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பின்னர், அவரது இரண்டு நண்பர்களும் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஏனைய இருவரை கைது செய்ய இறக்குவானை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேக நபருடன் குறித்த சிறுமி காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவளது காதலன் என்று கூறிக்கொண்ட 24 வயது இளைஞன், முதலில் சிறுமிக்கு பலவந்தமாக மது வழங்கிவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவரது இரண்டு நண்பர்களும் அவளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.