கடந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் ஜேர்மன் அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் ஜேர்மன் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிர வலதுசாரிகள் மற்றும் முன்னாள் இராணுவ பிரமுகர்கள் அடங்கிய குழு ஜேர்மன் பாராளுமன்ற கட்டடமான ரீச்ஸ்டாக்கை தாக்கி ஆட்சியை கைப்பற்ற தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது.
Reich Citizens இயக்கத்தின் ஆதரவாளர்களுக்கு எதிராக 11 ஜேர்மன் கூட்டாட்சி மாநிலங்களில் உள்ள 130இடங்களில் சுமார் 3,000 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஒருசிறிய ஆயுதக்குழுவுடன் ஜேர்மன் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு உறுதியான தயாரிப்புகளை செய்ததாக இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் சந்தேகிக்கப்படுவதாக அரசாங்க வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 25நபர்கள் ஜேர்மன் குடிமக்கள் என்றும், வலதுசாரி பயங்கரவாத அமைப்பில் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தீவிர வலதுசாரி அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபாடு இருப்பதாகக் கூறப்பட்டு விசாரிக்கப்பட்டது.
மற்ற சந்தேக நபர்கள் பாடன்-வட்டுர்ட்டெம்பேர்க், பவேரியா, பெர்லின், ஹெஸ்ஸே, தாழ் சாஸோனி, சாஸோனி, துரிங்கிங் ஆகிய மாநிலங்களிலும், அண்டை நாடுகளான ஆஸ்திரியா மற்றும் இத்தாலியிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021 நவம்பர் மாத இறுதியில் இருந்து தங்கள் இலக்கை பலத்தால் மட்டுமே அடைய முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்ததால் அதை செயற்படுத்த தயாராகி வருவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இவ்அமைப்பு ஜேர்மனில் ஏற்கனவே இருந்த அரச ஒழுங்கை முறியடித்து, அதற்குப் பதிலாக அவர்களது சொந்த அரச வடிவத்தை கொண்டு வரவேண்டும் என்ற குறிக்கோளுடன் பயங்கரவாத அமைப்பை நிறுவியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஜேர்மனியில் கடந்த சில வருடங்களாக தீவிர வலதுசாரி சித்தாந்தத்தின் தீவிரமான எழுச்சி ஏற்பட்டுள்ளது.
ஜேர்மனின் 2ஆம் உலக போருக்குப் பிந்தைய அரசியலமைப்பை ஏற்காத Reich Citizens movement என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களே ஜேர்மனிய பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார்கள்.
13ஆம் ஹெய்ன்றிக் இளவரசர் எனக்கூறப்படும் 71வயதான நபர் இக்குழுவின் திட்டத்தில் முக்கிய நபராக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வலதுசாரி குழுவில் முன்னாள் இராணுவ அங்கத்தவர்களும், ஜேர்மனிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்தஙர்களில் அடங்குவர்.
நவம்பர் 2021 இன் இறுதியில் நிறுவப்பட்ட இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஜேர்மனில் தற்போதுள்ள அரசியலமைப்பைக் கவிழ்த்து அதன் சொந்த அரசாங்கத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.
மேலும் இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், அரச பிரதிநிதிகளுக்கு எதிரான வன்முறையின் மூலமும் மட்டுமே இந்தத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதை அமைப்பின் உறுப்பினர்கள் நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதில் கொலைக் குழுவும் அடங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மொட்டைத்தலையுடனும், உலாவும் நாஜிக்கள் அல்ல. மாறாக உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இளவரசர் றொயிஸ் ஹைன்ரிச் தலைவராக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இளவரசர் ஹெய்ன்றிக் பிராங்ஃபோர்ட் நகர நில-கட்டட முகவரும், வோக்ட்லாண்ட் பகுதியை 700ஆண்டுகளாக ஆட்சி செய்த துரிங்கிய உயர் குடும்பத்தின் வழித்தோன்றலுமாவார்.
மற்றொரு முக்கிய சந்தேக நபரான முன்னாள் இராணுவ பாரசூட் பிரிவு தளபதி ரூடிகர் வி.பி. அமைப்பின் “இராணுவப் பிரிவிற்கு” தலைமை தாங்குகிறார்.
கைது செய்யப்பட்டவர்களில் டாக்டர் பட்டம் பெற்ற வழக்கறிஞர், மருத்துவர், விமானி, ஒரு இசைகலைஞர், பேர்லின் நீதிபதியும் ஜேர்மனுக்கான தீவிர வலதுசாரி மாற்றீட்டு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிர்கிட் மல்சாக்-வின்கெமான், முன்னாள் உயரடுக்கு சிறப்புப் படைத் தளபதி மாக்சிமில்லியான் உட்பட, அப் படையினரின் முன்னாள் உறுப்பினர்களும் அடங்குவர்.
தேடப்பட்ட இடங்களில், பாடன்-வூர்ட்டெம்பேர்க்கில் உள்ள கால்வ் நகரிலுள்ள கே.எஸ்.கே இன் முகாமும் அடங்கும். இது ஏற்கனவே வலதுசாரி பயங்கரவாத ஹன்னிபால் வலையமைப்பின் மையமாக இருந்தது.
ரைஸ் குடிமக்கள் அமைப்பின் ஒரு பகுதியாகவும், வலதுசாரி சித்தாந்தத்தின் ஆதரவாளர்களாகவும் அடையாளம் காணப்பட்ட இந்த பயங்கரவாத வலையமைப்பு, குறிப்பிட்ட சதித் திட்டங்கள் மற்றும் மேம்பட்ட இராணுவத் தயாரிப்புகளை கொண்டிருந்ததாக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் ஜேர்மனின் மத்திய குற்றவியல் விசாரணைக்குழுவின் விசாரணைகளின் அடிப்படையில் அமைந்தன.
இது கடந்த செப்டெம்பர் தொடக்கத்தில் இருந்து பலநூறு அதிகாரிகளின் ஈடுபாட்டுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தகவல்தொடர்புகளைக் கண்காணித்து இடைமறித்து வருகிறது. வங்கிக் கணக்குகள் விசாரிக்கப்பட்டு, வலைத் தள கலந்துரையாடல் குழுக்களும் கண்காணிக்கப்பட்டன.
ஹெய்ன்றிக் இளவரசர் தலைமையிலான ஒருகுழு நவம்பர் 2021இல் முதல் ஜேர்மனின் அதிகாரத்தைக்கைப்பற்றுவதற்கும், அதன் சொந்த அரசு கட்டமைப்புகளை நிறுவுவதற்கும் திட்டமிடுவதற்காக தொடர்ந்து இரகசியமாக சந்தித்து வந்திருக்கிறது.
ஹெய்ன்றிக் எதிர்கால அரச தலைவராக இருக்க வேண்டும், மற்ற உறுப்பினர்கள் நீதி, வெளிவிவகாரங்கள் மற்றும் சுகாதாரம் உட்பட பல்வேறு அமைச்சகங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென திட்டமிடப்பட்டிருந்தது.
ஆயுத பலத்தால் திட்டமிடப்பட்ட அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அமைப்பின் இந்த பகுதியே பொறுப்பு எனவும், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுகள் என்று அழைக்கப்படும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அமைப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.
இவமைப்பின் வி.பி.ரூடிகர் தலைமையிலான இராணுவப் பிரிவின் முன்னணி ஊழியர்கள், ஏனைய பணிகளுடன், புதிய உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்தல், ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களை வாங்குதல், இடைமறிக்க முடியாத தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை நிறுவுதல் ஆகியவற்றைக் கையாண்டனர்.
இக்கட்டமைப்பு சுடும் பயிற்சிகளை நடத்துதல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுகளின் எதிர்கால தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதற்கான திட்டங்களுக்கும் பொறுப்பேற்கும்.
ஆட்சேர்ப்பு முயற்சிகளில் குறிப்பாக ஆயுதப்படை மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் மீது இருந்தது. இந்த நோக்கத்தை செயல்படுத்த 2022 கோடையில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.
வலதுசாரி நாளிதழான Frankfurter Allgemeine Zeitung இக்குழுவுக்கு எதிரான அரச நடவடிக்கையையும், பாதுகாப்புப் படைகள் வலதுசாரி அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபத்தமானதென குறிப்பிட்டள்ளது.
இதேவேளை செய்தித்தாள்களில் இந்த நபர்களை தீவிரமாக எடுத்துக்கொள்வது அவர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பதாக இருக்கும்’ என்று குயுணு ஆசிரியர் ஜஸ்பர் வொன் அல்டென்போக்கம் எழுதி உள்ளார்
சுற்றியுள்ள குழுவில் கொடூரமான நோக்கங்களை குறை மதிப்பீடு செய்யக்கூடாது. சதிகாரர்கள் வெற்றி பெறுவதற்கான எந்த அடிப்படையும் இல்லை எனவும் கூறப்பட்டது.
தீவிர வலதுசாரிகளும் அதன் சித்தாந்தமும் எந்த அளவிற்கு ஊடுருவி, அரச எந்திரம் மற்றும் ஆளும் வட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன என்பதை தற்போது இந்தக் குழுவின் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தி உள்ளன.
பல வருடத்திற்கு முன்பு இக்குழு உருவாக்கப்பட்டது என்ற கூற்று வெறுமனே நம்பத்தகுந்ததல்ல. . AFD ( Reichsbürger) பிரிவினர் மற்றும் ஹன்னிபால் வலைப்பின்னல் போன்ற பயங்கரவாத குழுக்களுடனான அதன் தொடர்புகள் பற்றி விரிவாக ஊடகத்துறையினரால் வெளிப்படுத்தப்பட்ட போதிலும், பாதுகாப்புப் படைகள் பெரும்பாலும் அப்படியே இருந்தன என்று வெளிப்படையாக அறியப்பட்டுள்ளது.
ஜேர்மனின் இரகசிய சேவைக்கு எட்டு ஆண்டுகள் தலைமை தாங்கிய ஹான்ஸ்-ஜோர்க் மாஸன், யுகுனுக்கு அறிவுரை வழங்கி பாதுகாத்து, அதன் இனவெறி சித்தாந்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.
Underground (NSU) அமைப்பின் மூவரால் அதனால் பாதிக்கப்பட்டவர்களை பல ஆண்டுகளாக தடையின்றி வன்முறை செய்ய முடிந்ததமை குறிப்பிடத்தக்கது.
(ஐங்கரன் விக்கினேஸ்வரா)