மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையை அடுத்த தாம்னி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, காதி ஆற்றில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கிடந்ததாக தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடம் வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இது பற்றி விசாரணையும் ஆரம்பித்தனர்.
மேலும் அந்த பெண் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த நிலையில், அந்த பெண்ணின் உடல் கிடந்த பகுதியில் கேமரா எதுவும் இல்லாததால் ஆரம்பத்தில் அவரை அடையாளம் காண போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதன் பின்னர், நவி மும்பை பகுதியில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களை சேகரித்த போதும், அதில் எதுவும் துப்பும் கிடைக்கவில்லை என தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, பெண்ணின் உடலில் இருந்தே போலீசாருக்கு துப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட பெண் காலில் செருப்பு அணிந்திருந்த நிலையில், அதில் கடையில் பெயர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதில் இருந்த செருப்பு கடையின் பெயரில் அனைத்து கிளைகளுக்கு சென்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை காட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்படி ஒரு சூழலில், வாஷியில் ஒரு கடையில் அந்த பெண் செருப்பு வாங்க வந்ததாக கடை ஊழியர் தெரிவித்துள்ளார். இதன் பின்னர், அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அந்த பெண்ணுடன் ஒரு ஆண் வந்திருந்தும் தெரிய வந்துள்ளது.
இதில் இருந்து விசாரித்த போது அந்த பெண்ணின் பெயர் ஊர்வசி என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவர் பணிபுரிந்து வந்த இடத்தில் விசாரித்த போது வேலைக்கு சென்று விட்டு அவர் வீடு திரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இன்னும் விசாரணையை தீவிரப்படுத்திய போது ஊர்வசியுடன் வந்த நபர் பெயர் ரியாஸ் கான் என்பதும் அவர் ஒரு ஜிம் பயிற்சியாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.
முதல் மனைவியுடன் விவாகரத்தான நிலையில், இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ரியாஸ் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், ஊர்வசியுடன் ரியாஸ் கானுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால் தன்னை திருமணம் செய்யுமாறு ஊர்வசி கேட்டுக் கொண்டு அதனை ரியாஸ் மறுத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. தொடர்ந்து திருமணம் செய்யுமாறு தன்னை ஊர்வசி வற்புறுத்தி வந்ததால் அவரை கொலை செய்யவும் ரியாஸ் முடிவு செய்துள்ளார். அதன்படி, தனது நண்பர் உதவியுடன் திட்டம் போட்ட ரியாஸ் கான், ஊர்வசியை காரில் ஏற்றிக் கொண்டு செல்லும் வழியிலேயே கொலை செய்து ஆற்றில் வீசியதும் தெரிய வந்துள்ளது.
இதற்கடுத்து, ரியாஸ் கானை கைது செய்து போலீசார் அவரிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.