டிசம்பர் 26 ஆம் திகதி வரை சுமார் 701,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள், 2022 ஆம் ஆண்டில் சுமார் 720,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

2021 இல் 194,495 சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு வந்திருந்தனர்.

இதுவரை வெளியாகியுள்ள தரவுகளின்படி, இம்மாதம் 26 ஆம் திகதி வரையில் 73,314 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

2023 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் கணிசமான எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply