11 வயதான சிறுமியை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ், விஹாரையின் கடமையாற்றும் பிக்குவும் அந்த பிக்குவின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.​

மொனராகலை, தொம்பஹாவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியன்கொல்ல பிரதேசத்திலேயே இந்த சம்பவம், இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு உடந்தையாக இருந்த சிறுமி​யின் பாட்டி மற்றும் அத்தை ஆகிய இருவரும் புதன்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சிறுமி, கந்தானை பிரதேசத்திலுள்ள உறவினர் வீட்டில் இருந்து பாடசாலைக்குச் செல்கின்றது. பாடசாலை விடுமுறைக்கு லியன்கொல்ல பிரதேசத்திலுள்ள உறவினர்களின் வீட்டுக்கு நவம்பர் மாதம் வந்துள்ளது.

அச்சிறுமியை பாட்டி விஹாரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த விஹாரையில் வைத்து பிக்குவும், சிறுமியின் அத்தையின் வீட்டில் வைத்து பிக்குவின் சகோதரனும் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

கந்தானைக்கு சிறுமி திரும்பியதன் பின்னர், தனக்கு நேர்ந்ததை உறவினர்களிடம் தெரிவிக்க, இதுதொடர்பில் கந்தானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டு அமைய, கந்தானை பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு இணங்க தொம்பஹாவெல பொலிஸார். இந்த நால்வரையும் கைது செய்தனர்.

 

Share.
Leave A Reply