சாலையில் தலைகீழாக கார் ஒன்று இயக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரோட்ல தலைகீழா ஓடிய கார்.. அலறிய பொதுமக்கள்.. அப்புறம் தான் விஷயமே தெரிஞ்சிருக்கு.. உலக வைரல் வீடியோ.!

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது.

மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு.

அதிலும் குறிப்பாக மக்களை ஆச்சர்யப்படுத்தும் வகையிலான விஷயங்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற தவறுவதில்லை.

அந்த வகையில் சாலையில் தலைகீழாக கார் ஒன்று இயக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், பரபரப்பான சாலையில் தலைகீழாக இருக்கும் கார் ஒன்று வேகமாக நகர்வது போல இருக்கிறது.

ஆனால், அதனை உள்ளே இருக்கும் நபர் ஒருவர் இயக்கிக்கொண்டிருக்கிறார். சாலையில் அந்த விசித்திர கார் வளைந்து செல்வதை அங்கிருந்த மக்கள் அனைவரும் ஆச்சர்யம் கலந்த பயத்துடன் பார்த்தபடி நிற்கின்றனர்.

அந்த காரில் மேற்புறமாக டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், காரின் பாடியும் அது தலைகீழாக இருப்பது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் முன்பக்கத்தில் நம்பர் பிளேட்டும் பொருத்தப்பட்டுள்ளது. அந்நபர் காரை அது தலைகீழாக இருப்பது போல வடிவமைத்திருக்கும் விஷயம் தெரிந்தவுடன் அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யமடைகின்றனர்.

பொதுவாக வாகன பிரியர்கள் சிலர் தங்களது இருசக்கர மற்றும் காரை தங்களுடைய ரசனைக்கு ஏற்றபடி மாற்றியமைப்பதை பார்த்திருப்போம்.

இதற்காக கணிசமான தொகையை செலவு செய்யவும் பலர் தயாராகவே இருக்கின்றனர். இந்நிலையில், தலைகீழாக இருப்பது போல காரை வடிவமைத்த இந்த நபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வைரலாக பரவி வரும் இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ இதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கின்றனர். நெட்டிசன்கள் இந்த பதிவில்,”இப்படி ஒரு காரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை” எனவும் “மக்கள் தங்களுக்கு பிடித்ததை செய்கின்றனர்.

அதுவே ஆனந்தமும் கூட” என்றும், “இந்த வீடியோ என்னை குழப்பிவிட்டது” என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply