திருமணமாகி 2 மாதங்களே ஆனநிலையில் காதல் தம்பதியொன்று ஒரே கயிற்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் அனந்தமாடன்பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி.

28 வயதான அவர் அப்பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி என்ற 22 வயதான பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

எனினும் திருமணத்தின் பின்னர் இருவருக்கும் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் முனியசாமியின் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறக்க முயன்றனர். எனினும் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் இதுகுறித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தமது உயிரை மாய்த்துக்கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தம்பதியின் உடல்களைக் கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக அதனை வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Share.
Leave A Reply