இன்று (02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலையை 15 ரூபாயாலும் மண்ணெண்ணெயின் விலையை 10 ரூபாயாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை.
420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 405 ரூபாய்க்கும் 365 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 355 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.