முகப்பருக்கள் ஒருவரது முகத்தில் மட்டுமல்லாது அவரது மனதிலும் பெரிய வடுவை ஏற்படுத்துகிறது.
முகப்பருக்கள் குறித்து எப்போதுமே கவலைப்படும் நபர்கள் இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
முகப்பரு என்பது பொதுவான ஒரு சரும நிலைதான். அனைத்து வயதினருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் முகப்பரு ஏற்படுகிறது. முகப்பரு தடிப்புகள், எண்ணெய் சருமம் மற்றும் சில நேரங்களில் தொடுவதற்கு வலியை ஏற்படுத்தும்.
மருத்துவர் ஷியாம் மங்காடியா, குஜராத்தின் ஜூனாகத் நகரில் தோல் மற்றும் சிகை நிபுணராக உள்ளார்.
முகப்பரு குறித்து ஷியாம் மங்காடியா கூறுகையில், “முகப்பரு ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.
முதல் காரணம், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம். பதின்பருவத்தை எட்டும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் செபாக்ஸ் சுரப்பியில் இருந்து முகத்திற்கு எண்ணெய் சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இதனால் சுரப்பி விரிவடைந்து முகப்பரு ஏற்படுகிறது” என்றார்.
பிரிட்டன் சுகாதார துறையின் கருத்துப்படி, முகப்பரு எந்த வயதிலும் வரலாம். 11 முதல் 30 வயதுக்குட்பட்ட 95 சதவீதம் பேர் முகப்பரு மூலம் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுவாக 25 வயதில் முகப்பரு மறைந்துவிடுகின்றன. எனினும், 3 சதவீதம் பேருக்கு 35 வயதிற்கு பிறகும் முகப்பெரு இருக்கும்.
இதேபோல், பெற்றோர்கள் இருவருக்கும் முகப்பரு இருந்தால் குழந்தைகளுக்கும் முகப்பரு தோன்ற வாய்ப்பு உள்ளது.
முகப்பருவின் வகைகள் மற்றும் பாதிப்புகள்
மருத்துவர் ஷியாம் மங்காடியா தொடர்ந்து பேசுகையில், “பொதுவாக நான்கு வகையான முகப்பருக்கள் உள்ளன.
ஆரம்ப கட்டத்தில், முகப்பரு பருக்கள் வடிவில் உள்ளது. மருத்துவச் சொற்களில் இது ‘காமெடோன்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
பருக்கள் பிளாக்ஹெட்ஸ் அல்லது ஒயிட்ஹெட்ஸ் ஆகியவற்றில் இருக்கலாம். சிலர் சிவப்பு நிற பருக்களை கொண்டிருக்கலாம் .
மூன்றாவது வகை முகப்பருக்கள் கொப்புளங்கள் (உள்ளே சீழ் கொண்டிருக்கும்) மற்றும் நான்காவது வகை நீர்க்கட்டிகள் ஆகும்” என்றார்.
முகப்பருக்கள் எந்தளவு முகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற கேள்விக்கு, சிகிச்சை எடுத்துகொள்ளப்படாத பெரிய அளவிலான முகப்பெருக்கள் சில வேளைகளில் வடுக்கள் அல்லது குழிகளை ஏற்படுத்துகின்றன. இதனால் முகம் விகாரமாக தோற்றமளிக்கலாம்
டீன் ஏஜ் பருவத்தில் ஏன் முகப்பரு வருகிறது?
முகப்பரு ஏற்பட்டால் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
உங்களுக்கு முகப்பரு ஏற்பட்டால் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீரை குடிக்க வேண்டும் என்று கூறுகிறார் மங்காடியா. அதிக தண்ணீர் பருகினால் முகப்பரு குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேபோல், உணவில் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவைக் குறைக்க வேண்டும். சாக்லேட், சீஸ், பனீர் மற்றும் பிற பால் பொருட்களின் நுகர்வை குறைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் அவர், அதிக காய்கறிகள் மற்றும் புளிப்பு பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என பரிந்துரைக்கிறார்.
சிகிச்சைகள்
முகப்பருக்களுக்கு கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஆரம்ப நிலையிலேயே முகப்பருவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் முகத்தில் வடுக்களோ குழிகளோ ஏற்படுவதை தவிர்க்கலாம்.
இது குறித்து ஷியாம் மங்காடியா கூறுகையில், “பெரும்பாலும் முகத்தில் குழி ஏற்பட்ட பின்னரே மக்கள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகின்றனர். அந்த வேளையில், சிகிச்சை அளிக்க கூடுதல் நேரம் எடுப்பதோடு அதற்கான செலவும் அதிகமாகும் ”
டீன் ஏஜ் பருவத்தில் ஏன் முகப்பரு வருகிறது?
சிகிச்சையின் முதல் பகுதி தடுப்பு ஆகும். அதாவது, உணவில் கவனம், நீரேற்றத்தில் கவனிப்பு.
சிகிச்சையின் இரண்டாவது பகுதி மருந்துகளை உள்ளடக்கியது. முகப்பருவுக்கு கிண்டாமைசின், பிங்கல்பெராக்சைடு போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
அடுத்த பகுதி ரசாயனம் பூசுதல். முகத்தில் ரசாயனம் பூசுவதன் மூலம் குழி ஏற்படுவது தவிர்க்கப்படும். இதற்கு அடுத்த மூன்றாவது பகுதி என்பது லேசர் சிகிச்சை ஆகும். குழி இருந்தால் லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
பிரிட்டிஷ் சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, முகப்பரு சிகிச்சை 3 மாதங்கள் வரை நீடிக்கும், எனவே ஒரே இரவில் அல்லது உடனடி முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்.
முகப்பருவை கட்டுப்படுத்துவதற்கான வீட்டு மருத்துவம்
பாதிக்கப்பட்ட பகுதியை ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் நீர்கொண்டு கழுவ வேண்டாம் என்றும் பிரிட்டர் சுகாதார துறை கூறுகிறது.
தொடர்ந்து அந்த இடத்தை கழுவுவதால் தோல் எரிச்சல் ஏற்பட்டு அறிகுறிகள் மேலும் மோசமடையக்கூடும்.
பாதிக்கப்பட்ட இடத்தை சோப் மற்றும் மிதமான சூட்டில் உள்ள நீரை கொண்டு கழுவலாம்.
அதிக சூடான அல்லது குளிர்ச்சியான நீரை கொண்டு கழுவுவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கரும்புள்ளிகளை “சுத்தம்” செய்யவோ அல்லது புள்ளிகளை அழுத்தவோ முயற்சிக்காதீர்கள். இது அவற்றை மேலும் மோசமாக்கி நிரந்தர வடுவை ஏற்படுத்தக் கூடும்.
அதிகப்படியான மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
எண்ணெய் சார்ந்த மேக்கப் பொருட்கள், சூரிய கதிர்வீச்சு தடுப்பு பொருட்களுக்கு பதிலாக தண்ணீர் சார்ந்த பொருட்களை பயன்படுத்தலாம்.
தூங்குவதற்கு முன்பாக மேக்கப்பை முழுவதும் அகற்றிவிட வேண்டும்.
டீன் ஏஜ் பருவத்தில் ஏன் முகப்பரு வருகிறது?
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது என்பது உங்கள் முகப்பருவை குணப்படுத்தாது. எனினும், இது உங்களின் மனநிலையை புத்துணர்ச்சி அடைய செய்து உங்களை பற்றி நீங்கள் உயர்வாக எண்ண வழிவகுக்கும்.
உங்கள் தலைமுடியை தவறாமல் கழுவவும், உங்கள் தலைமுடி உங்கள் முகத்தில் விழுவதைத் தவிர்க்கவும்.
முகப்பருவை குணப்படுத்த முடியாவிட்டாலும், சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம்.
உங்களுக்கு லேசான முகப்பரு ஏற்பட்டால், ஆலோசனைக்காக ஒரு மருந்தாளரிடம் பேசுவது நல்லது.
புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்க பல கிரீம்கள், லோஷன்கள் மற்றும் ஜெல்களை மருந்தகங்களில் வாங்கலாம்.
குறைந்த பென்சாயில் பெராக்சைட் செறிவு கொண்ட தயாரிப்புகள் பரிந்துரைக்கப்படலாம், ஆனால் இது ஆடைகளை ப்ளீச் செய்யும் என்பதால் கவனமாக இருக்கவும்.
உங்கள் முகப்பரு கடுமையாக இருந்தால் அல்லது உங்கள் மார்பு மற்றும் முதுகில் தோன்றினால், அதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது மேலும் வலிமையான கிரீம்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். இவை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே கிடைக்கும்.