பிறந்த உடனேயே குழந்தையைக் கொன்று சடலத்தை பையில் போட்டு வீட்டில் உள்ள கழிவறையின்  பாத்திரம் ஒன்றில்  மறைத்து வைத்திருந்த 23 வயதுடைய தாயை சந்தேகத்தின் பேரில் தெரிபஹ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தமக்கு கடுமையான வயிற்றுவலி உள்ளதாகக் கூறி, தெரிபஹ அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  நிலையில் வைத்தியசாலையை விட்டு  தப்பியோடியதில் டாக்டர் சந்தேகமடைந்து இது குறித்து அப்பகுதி குடும்ப சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவித்து விசாரணை நடத்துமாறு கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப சுகாதார உத்தியோகத்தர் அவரது வீட்டுக்குச் சென்றபோது, மலசலகூடத்தில்  ஒரு பையில் வைத்து பாத்திரமொன்றில் மறைத்து பெண் சிசுவின் சடலம் இருப்பதைக் கண்டு வைத்தியசாலை வைத்தியர் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்தே சந்தேகத்தின் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply