அவ்வப்போது நாம் இணையத்தில் வலம் வரும் போது நம்மை சுற்றி நடக்கும் பல வியப்பான விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

அதே போல இயல்பான ஒரு விஷயத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வினோதமாக ஏதாவது விஷயங்களை சிலர் செய்யும் போது அது பெரிய அளவில் இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாக மாறும்.

அப்படி ஒரு சம்பவம் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக, பால் விற்கும் நபர்கள் ஸ்கூட்டி, பைக் உள்ளிட்ட வாகனங்களில் பால் கேன்களை வைத்து வீடு வீடாக சென்று விற்பனை செய்வார்கள்.

மேலும் பால்காரர்கள் செல்லும் வாகனம் என்றாலே M 80 வாகனம் பலரது நினைவுக்கும் வரும்.

பல இடங்களில் இந்த வாகனம் மூலம், பால்காரர்கள் செல்வதை பார்த்திருப்போம். பால் கேன்களை வைத்து கொண்டு செல்ல இந்த வாகனம் வசதி உள்ளதாக இருந்தது.

இதனையடுத்து, தற்போது ஸ்கூட்டி, மோட்டார் சைக்கிள்களை பால் கேன்கள் வைத்து கொண்டு போக பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் பால்காரர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த பைக்கான ஹார்லி டேவிட்சன் பைக்கில் பால் வியாபாரம் செய்து வருவது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக அளவில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கை அந்த பால்காரர் பயன்படுவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில் இதன் விலை சுமார் 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் தகவல் கூறுகின்றது.

இந்த நபர் பெயர் என்ன, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் சரிவர தெரியவில்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் ஹார்லி டேவிட்சன் பைக்கில் பின்னால் பால் கேன்களை கட்டிக் கொண்டு சாலையில் அந்த நபர் வலம் வருவது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாக பரவி வருகின்றன.

இது பற்றி இணையவாசிகள் பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில், பால் வியாபாரம் இல்லாமல் வேறு ஏதேனும் காரணத்திற்காக கூட அப்படி அந்த இளைஞர் செய்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply