யாழ்ப்பாணம், சுன்னாகம், மயிலங்காடு பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஏழாலை தெற்கை சேர்ந்த குலசிங்கம் சூரியகுமார் என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

சம்பவமும் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply