வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களில் பணம் திருடப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மீகஹதென்ன பொலிஸ் நிலைய நிர்வாகப் பகுதி பொறுப்பதிகாரி உட்பட ஏனையோரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திலுள்ள வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களில் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மீகஹதென்ன பொலிஸ் பரிசோதகர், பல்கேரிய பிரஜைகள் இருவர், கனேடிய பிரஜை மற்றும் இலங்கையர் ஒருவர் ஆகியோரையே விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் நீதிமன்றம் இன்று (ஜன 10) உத்தரவிட்டுள்ளது.

ஹிக்கடுவ, பத்தேகம, காலி, கராப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அரச வங்கிகள் பலவற்றின் கணினியை ஊடுருவி பெருந்தொகையான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், முதல்கட்டமாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளையடுத்தே மீகஹதென்ன பொலிஸ் நிலைய நிர்வாகப் பகுதி பொறுப்பதிகாரி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Share.
Leave A Reply