அரசியல் சந்திப்பின்போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர்  மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென அவரது மனைவி சந்திரிகா பிரியங்கனி குரே கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் களுத்துறை போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஏ.குமசாரு முன்னிலையில் இன்று (ஜன 13)  இடம்பெற்ற மரண விசாரணையின்போதே அவர்  இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

ரெஜினோல்ட் குரேவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.  சோமேசிறியின் சாட்சியத்தின் பின்னரே அவர் இவ்வாறு கோரினார்.

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் கெவிது குமாரதுங்க உட்பட நால்வருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பரிமாற்றத்தின் பின்னரே அவர் நோய்வாய்ப்பட்டதாக ஜே.எம். சோமேசிறி சாட்சியமளிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து களுத்துறை போதனா வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி சிறியந்த அமரரத்னவின் தலைமையில் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply