17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, மூன்று பேர் இணைந்து அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், திண்டிவனத்தில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது, அந்த கடைக்கு அருகாமையிலுள்ள ஆட்டோ நிறுத்தத்தினைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிம்பு என்பவருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்த சிம்பு, இந்த சிறுமியை பலமுறை தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அந்த இளைஞர்.

பின்னர் பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிவா, செல்வம் ஆகியோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்திருக்கிறார்.

அங்கு சென்ற சிவா, செல்வம் இருவரும் அந்தச் சிறுமியை கட்டாயப்படுத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட ரோசனை போலீஸார்… சிம்பு, சிவா, செல்வம் ஆகிய மூன்று பேரையும் நேற்று அதிரடியாக கைதுசெய்தனர்.

திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையம்.

அந்தச் சிறுமி, 17 வயதுடையவர் என்பதால் மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர் திண்டிவனம் மகளிர் போலீஸார்.

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று, மூன்று பேர் இணைந்து அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply