கோப்பாய் – இருபாலையில் நேற்றிரவு வாளை  காட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இரவு 9 மணியளவில் வீதியில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டி மோட்டார் சைக்கிள் பறித்துச் செல்லப்பட்டது.

இருபாலை டச்சு வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் வீதியின் குறுக்கே நின்று வீதியில் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றுள்ளார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பில்  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply