பிள்ளைகள் தூங்கிய பின்னர், மோட்டார் அறையின் மாடியில் வனராஜ், அவரின் மனைவி ஏசுராணி இருவரும் தங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து, காலையில் எழுந்து பார்த்தபோது ஏசுராணி உடலில் ரத்தக்காயங்களுடன் இறந்துக் கிடந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரமான அத்திக்கோயில் மலைவாழ்மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வனம் (எ) வனராஜ் (50). மலையடிவார தோட்டமொன்றில் காவலாளியாக பணி செய்து வருகிறார். இவர் ஏற்கனவே இரண்டுமுறை திருமணமானவர்.
இந்நிலையில் கணவரை பிரிந்து தனியே இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த ஏசுராணி (எ) உமா (28) என்பவரை மூன்றாவதாக வனராஜ் திருமணம் செய்துக்கொண்டு கான்சாபுரம் பகுதியில் வாழ்ந்து வந்தார்.
வனராஜ், ஏசுராணி, ஏசுராணியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு பெண் பிள்ளைகள் என நான்கு பேரும் ஒரேக்குடும்பமாக கான்சாபுரம் அத்திக்கோவில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சங்கர்ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து காவல் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் இரவில் பிள்ளைகள் இருவரும் தூங்கிய பின்னர், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அறையின் மாடியில் வனராஜ் மற்றும் அவரின் மனைவி ஏசுராணி இருவரும் தங்கியதாக தெரிகிறது.
தொடர்ந்து, காலையில் எழுந்து பார்த்தபோது ஏசுராணி உடலில் ரத்தக்காயங்களுடன் இறந்துக் கிடந்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த வனராஜ், பகலில் வெகுநேரம் கழித்தே ஏசுராணி இறந்ததுக்குறித்து கூமாபட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ஏசுராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அங்குவந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் சம்பவ இடத்தில் ஏசுராணி இறந்துக்கிடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது வனராஜிடம் போலீஸார் விசாரணை நடத்துகையில் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸார் தெரிவிக்கையில், “வனராஜூம், ஏசுராணியும் இரவு மோட்டர் அறையில் தங்கியிருந்த இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
பின்னர், போதையில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது தன்னால் இதற்குமேல் உடலுறவு கொள்ளமுடியாது என ஏசுராணி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும், வனராஜ், தனது கையில் இருந்த டார்ச்லைட்டை, மனைவியின் உறுப்பில் வைத்து அழுத்தியுள்ளார்.
இதனால் அலறித்துடித்த ஏசுராணி அதிக ரத்தம் வெளியேறி இறந்ததாக வனராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்”. என்றனர்.
இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், வனராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.