காணியில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுவுடன் பாலியல் உறவு வைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் மகேஷ் ஹேரத் உத்தரவிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் வீரகுல, இஹல வீடியவத்த பகுதியில் உள்ள காணியில் கட்டிவைக்கப்பட்டிருந்த பசுவுடன் குறித்த இளைஞர் பாலியல் உறவு கொண்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீரகுல பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த காணி உரிமையாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார், நீதிமன்றில் தெரிவித்தனர்.

ராகம போதனா வைத்தியசாலையில் உள்ள மனநல வைத்தியரிடம் சந்தேக நபரை முன்னிலைப்படுத்தி மருத்துவ அறிக்கையுடன் ஜனவரி 23 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு மஹர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply