இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

கடந்த 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 12,064 ஆகும்.

மேலும், இந்தியாவில் இருந்து 5,838 பேரும், ஜேர்மனியில் இருந்து 3,945 பேரும், பிரிட்டனில் இருந்து 3,862 பேரும், பிரான்சில் இருந்து 2,241 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இம்மாதம் 105,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

Share.
Leave A Reply