திருவனந்தபுரம்: ரிசப்ஷனில், போட்டோ ஷூட் எடுத்து கொண்டிருந்த 19 வயது மணமகள், மணமேடையிலேயே சரிந்து விழுந்து, உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் உண்டு பண்ணி வருகிறது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது பதாயிக்கர என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர்கள் முஸ்தபா – ஜீனத் தம்பதியினர்.. இவர்களது மகள் பாத்திமா பதூல்.. 19 வயதாகிறது.

இவருக்கும், மூர்க்க நாடு என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்ரும் திருமணமம் நிச்சயிக்கப்பட்டது.. கடந்த சனிக்கிழமைதான் இவர்களுக்கு கல்யாணம் தேதி முடிவானது.

போட்டோ ஷூட்

திருமணத்தின் முந்தைய நாள் மணப்பெண்ணின் வீட்டில் வைத்து இஸ்லாமிய மத முறைப்படி மயிலாஞ்சி கல்யாணம் மற்றும் ரிசப்ஷன் நிகழ்ச்சியும் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.. வண்ண வண்ண அலங்காரங்களுடன், புத்தம் புது ஆடையுடன், முகம் முழுக்க சந்தோஷத்துடன், காணப்பட்டார் கல்யாணப்பெண் பாத்திமா..

ரிசப்ஷனில் குடும்பத்தாருடன் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்..

இதனால் பதறிப்போன குடும்பத்தினர் மணப்பெண்ணை மீட்டு, உடனடியாக பெரிந்தலமண்ணாவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்..

நெஞ்சுவலி

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.. ஆனால், மருத்துவ சோதனைகள் நடைபெற்று கொண்டிருந்தபோதே, பாத்திமா உயிரிழந்துவிட்டார்..
மயக்கத்திலேயே அவரது உயிர் பரிதாபமாக பிரிந்தது.. இதுகுறித்து அவரை பரிசோதித்த டாக்டர் சொல்லும்போது, சத்தம் இல்லாத நெஞ்சு வலியால்தான் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினார்..
இதையடுத்து, பாத்திமாவின் உடல் மலப்புரம் மஞ்சேரி அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

நெஞ்சுவலி

ஆனால், அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நெஞ்சுவலிதான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும், போஸ்ட் ரிப்போர்ட் முழுமையாக வரவேண்டும் என்றும், அதேபோல போரென்ஸிக் ரிப்போர்ட்டும் வரவேண்டும்.

இவை எல்லாம் வந்தபிறகுதான், மரணத்தின் காரணம் என்ன என்பது தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாத்திமாவின் சடலத்தை கண்டு, உறவினர்கள் கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது.. ரிசப்ஷனில் இளம்பெண், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், மலப்புரம் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது

சாப்ட்வேர்

இப்படித்தான் கடந்த மாதம், நம் புதுச்சேரியிலும் ஒரு சோகம் நடந்தது.. தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார்.. 30 வயதாகிறது.. இவர் கோமதி என்ற பெண்ணை காதலித்தார்..

பெரம்பலூர் தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும்போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டது.. சுரேஷ்குமார் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்தார்.. கோமதி கோட்டக்குப்பம் நகராட்சி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்..

இரு குடும்பத்தினரும் பேசி, நவம்பர் 10ம் தேதி புதுவை காலாப்பட்டு பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.

ரிசப்ஷன்

திருமணம் முடிந்து அனைவரும் விருந்து சாப்பிட்டுள்ளனர். பிறகு சிறிது நேரத்திலேயே ரிசப்ஷன் நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளதால், மாப்பிள்ளை சுரேஷ்குமார் ரிசப்ஷனுக்கு, டிரஸ் மாற்றி கொள்ள ரூமுக்குள் நுழைந்தார்..

நீண்ட நேரம் வெளியே வராததால், குடும்பத்தினர் உள்ளே நுழைந்து பார்த்தபோது, சுரேஷ்குமார் மயங்கிய கீழே விழுந்து கிடந்துள்ளார்.

அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, வழியிலே சுரேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்… காலையில் திருமணம் முடிந்தநிலையில், மாலையில் மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்திவிட்டு போனது.

 

 

Share.
Leave A Reply