உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களும் இதனை உறுதிப்படுத்தினர்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு ஒன்றரை மணித்தியாலம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.