நாள்தோறும் 2 டன் முதல் 5 டன் வரையிலான 40 வகையான மீன்களும் ஜந்து வகையான இறால்களும், 10 வகையான நண்டுகளும் பிடிக்கப்பட்டு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீஸன் நடைபெற்று வருகிறது.

அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த மீன்பிடி சீஸன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள. இங்கு தங்கி மீன் பிடிக்கின்றனர்.

இங்கு நாள்தோறும் 2 டன் முதல் 5 டன் வரையிலான 40 வகையான மீன்களும், ஐந்து வகையான இறால்களும், 10 வகையான நண்டுகளும் பிடிக்கப்பட்டு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கோடியக்கரையில் மீனவர் வலையில் மூன்று கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல் நண்டு கிடைத்தது. அந்த நண்டைப் பார்த்ததில் சுமார் 5 லட்சம் முட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக மீனவர்கள் இந்த நண்டை பிளாஸ்டிக் பெட்டியில் தண்ணீரை நிரப்பி, வென்டிலேட்டர் பொருத்தி, உயிருடன் சீர்காழி அருகேயுள்ள ராஜீவ்காந்தி மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நண்டு குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து ஒரு வாரத்தில் சுமார் 4 லட்சம் நண்டு குஞ்சுகள் பொரித்தவுடன் அந்த நண்டுக் குஞ்சுகளை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்காக பத்திரமாக கடலில் கொண்டு போய் விடுகிறது மீன்வளத்துறை.

இது குறித்து கோடியக்கரை மீனவர் நலச் சங்க முன்னாள் செயலாளர் சித்திரவேலிடம் பேசினோம். “கோடியக்கரை கடற்பகுதியில் சீசன் காலத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் படகுடன் வந்து தங்கி மீன் பிடிப்பார்கள். நாள்தோறும் மீன், இறால், நண்டு வகைகளை பிடித்து வருகின்றனர்.

இவற்றில் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை குஞ்சுகளை பொரிக்கும் கல் நண்டுகளை, உயிருடன் பிடித்து வென்டிலேட்டரில் வைத்து பாதுகாத்து, சீர்காழி அருகேயுள்ள ராஜீவ்காந்தி மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு அனுப்பி வைப்போம்.

நாள்தோறும் ஒன்று முதல் ஐந்து நண்டுகள் வரை அனுப்பி வைத்து வருகிறோம். இதை ரூ.1,500 முதல் 2,000 வரை விலை கொடுத்து அதிகாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

குஞ்சுகள் பொரித்தவுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக கடலில் விடுகின்றனர்.

நேற்று பிடிக்கப்பட்ட கல் நண்டு சுமார் 3 கிலோ எடை உள்ளது. இந்த நண்டிலிருந்து சுமார் 5 லட்சம் முட்டைகள் ஒரு வார காலத்தில் வெளிவரும்.

தற்போது இதை ராஜீவ் காந்தி மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.

Share.
Leave A Reply