மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அண்மையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதும் இலங்கை மின்சார சபைக்கு 350 கோடி ரூபாய் தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.

மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை ஏப்ரல் 25ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்ய வேண்டும் என்று தெரிவத்த அமைச்சர், செப்டம்பர் வரை நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

ஜனவரி மாதம் மட்டும் மின்சார விநியோகத்துக்கான நிலக்கரிக்கு 384 கோடி ரூபாய் தேவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சைகளின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு 50 கோடி ரூபாய் பெறுமதியான எரிபொருள் தேவைப்படுகின்ற நிலையில் தற்போது அதனை வழங்க முடியாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply